Job 24 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽குறித்த காலத்தை எல்லாம் வல்லவர்␢ ஏன் வெளிப்படுத்தவில்லை?␢ அவரை அறிந்தோரும்␢ ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?⁾2 ⁽தீயோர் எல்லைக்கல்லை␢ எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக்␢ கொள்ளையிட்டு மேய்கின்றனர்.⁾3 ⁽அனாதையின் கழுதையை␢ ஓட்டிச் செல்கின்றனர்.␢ விதவையின் எருதை␢ அடகாய்க் கொள்கின்றனர்.⁾4 ⁽ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.␢ நாட்டின் வறியோர்␢ ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.⁾5 ⁽ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்␢ காட்டுக் கழுதையெனப்␢ பாலைநிலத்தில் அலைகின்றனர்;␢ பாலைநிலத்தில் கிடைப்பதே␢ அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.⁾6 ⁽கயவரின் கழனியில் அவர்கள்␢ சேகரிக்கின்றனர்;␢ பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்␢ அவர்கள் பொறுக்குகின்றனர்.⁾7 ⁽ஆடையின்றி இரவில்␢ வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;␢ வாடையில் போர்த்திக் கொள்ளப்␢ போர்வையின்றி இருக்கின்றனர்;⁾8 ⁽மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;␢ உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;⁾9 ⁽தந்தையிலாக் குழந்தையைத்␢ தாயினின்று பறிக்கின்றனர்;␢ ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.⁾10 ⁽ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்;␢ ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.⁾11 ⁽ஒலிவத் தோட்டத்தில்␢ எண்ணெய் ஆட்டுகின்றனர்;␢ திராட்சை பிழிந்தும்␢ தாகத்தோடு இருக்கின்றனர்.⁾12 ⁽நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;␢ காயமடைந்தோர் உள்ளம்␢ உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ␢ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.⁾13 ⁽இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;␢ இவர்கள் அதன் வழியை அறியார்;␢ இவர்கள் அதன் நெறியில் நில்லார்.⁾14 ⁽எழுவான் கொலைஞன் புலரும் முன்பே;␢ ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;␢ இரவில் திரிவான் திருடன் போல.⁾15 ⁽காமுகனின் கண்␢ கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;␢ கண்ணெதுவும் என்னைக் காணாது␢ என்றெண்ணி;␢ முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!⁾16 ⁽இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;␢ பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;␢ ஒளியினை இவர்கள் அறியாதவரே!⁾17 ⁽ஏனென்றால் இவர்களுக்கு நிழல்␢ காலைபோன்றது; சாவின் திகில்␢ இவர்களுக்குப் பழக்கமானதே!⁾18 ⁽வெள்ளத்தில் விரைந்தோடும்␢ வைக்கோல் அவர்கள்;␢ பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;␢ அவர்தம் திராட்சைத் தோட்டத்தை␢ எவரும் அணுகார்.⁾19 ⁽வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;␢ தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.⁾20 ⁽தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;␢ புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.␢ அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.⁾21 ⁽ஏனெனில், மகவிலா மலடியை␢ இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு␢ நன்மையைக் கருதினாரில்லை.⁾22 ⁽இருப்பினும், கடவுள் தம் வலிமையால்␢ வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;␢ அவர்கள் தம் வாழ்வில்␢ நம்பிக்கையோடு இருந்தாலும்␢ நிலைக்கமாட்டார்கள்.⁾23 ⁽அவர் அவர்களைப்␢ பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;␢ அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;␢ இருப்பினும் அவரது கண்␢ அவர்கள் நடத்தைமேல் உள்ளது.⁾24 ⁽அவர்கள் உயர்த்தப்பட்டனர்;␢ அது ஒரு நொடிப்பொழுதே;␢ அதன்பின் இல்லாமற் போயினர்;␢ எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;␢ கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.⁾25 ⁽இப்படி இல்லையெனில்,␢ என்னைப் பொய்யன் என்றோ,␢ என் மொழி தவறு என்றோ,␢ எண்பிப்பவன் எவன்?⁾Job 24 ERV IRV TRV