Jeremiah 13 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.”2 ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.3 எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:4 “நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”⒫5 ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.6 பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.”7 அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.⒫8 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:9 “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.10 என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.11 கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.12 நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள்.13 அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.14 அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.15 ⁽செவிகொடுத்துக் கேளுங்கள்!␢ செருக்குறாதீர்கள்;␢ ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.⁾16 ⁽உங்கள் கடவுளாகிய ஆண்டவரை␢ பெருமைப்படுத்துங்கள்;␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவர்␢ இருள்படரச் செய்யுமுன்பும்,␢ உங்கள் பாதங்கள் இருளடைந்த␢ மலைகளில் இடறுமுன்பும்␢ அவரை மாட்சிமைப் படுத்துங்கள்.␢ நீங்கள் ஒளியை எதிர்பார்த்து␢ நிற்கும் போதே␢ இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;␢ இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.⁾17 ⁽ஆனால் நீங்கள் இதற்குச்␢ செவி கொடுக்காவிட்டால்,␢ உங்கள் செருக்கை முன்னிட்டு␢ என் உள்ளம் மறைவில் அழும்;␢ அழுகை மிகுதியால் கண்களிலிருந்து␢ கண்ணீர் வழிந்தோடும்;␢ எனெனில், ஆண்டவரின் மந்தை␢ கைப்பற்றப்பட்டுள்ளது.⁾18 ⁽அரசனுக்கும் அரசனின்␢ அன்னைக்கும் சொல்லுங்கள்;␢ கீழே அமருங்கள். ஏனெனில்␢ உங்கள் மேன்மையின் மணிமுடி␢ உங்கள் தலைகளிலிருந்து␢ வீழ்ந்துவிட்டது.⁾19 ⁽நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம்␢ அடைபட்டுவிட்டன;␢ அவற்றைத் திறப்பார் யாருமில்லை;␢ யூதா முழுவதும்␢ நாடுகடத்தப்பட்டுள்ளது.␢ அது முற்றிலுமாய்␢ நாடு கடத்தப்பட்டுள்ளது.⁾20 ⁽உன் கண்களை உயர்த்தி␢ வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;␢ உனக்குத் தரப்பட்ட மந்தை — உன்␢ பெருமைக்குரிய மந்தை — எங்கே?⁾21 ⁽உன் நண்பர்களாக நீ␢ வளர்த்து விட்டவர்களே உன்␢ தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது␢ நீ என்ன சொல்வாய்?␢ பேறுகாலப் பெண்ணின் வேதனை␢ உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?⁾22 ⁽இவையெல்லாம் எனக்கு␢ ஏன் நிகழ வேண்டும் என␢ நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்;␢ உன் குற்றம் பெரிது! அதனால்தான்␢ உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது!␢ உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.⁾23 ⁽எத்தியோப்பியர் தம் நிறத்தை␢ மாற்றிக் கொள்ள முடியுமா?␢ சிறுத்தைகள் தம் புள்ளிகளை␢ அகற்றிக்கொள்ள முடியுமா?␢ அப்படி முடியுமானால்,␢ தீமையே செய்து பழகிவிட்ட␢ நீங்களும் நன்மை செய்ய முடியும்.⁾24 ⁽பாலைநிலக் காற்றில்␢ பறந்து போகும் பதர்போல்␢ நான் உங்களைச்* சிதறடிப்பேன்.⁾25 ⁽இதுவே உன் கதி!␢ நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!␢ ஏனெனில், நீ என்னை மறந்து␢ பொய்யை நம்பினாய்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾26 ⁽உன் ஆடைகளை␢ உன் முகத்துக்கு மேல் தூக்கிக்␢ கழற்றிவிடுவேன்;␢ உன் அவமானம் காணப்படும்.⁾27 ⁽உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய␢ விபசாரங்களையும்␢ காமக் கனைப்புகளையும்␢ பரந்த வெளியில் குன்றுகளின்மேல்␢ நீ செய்த கீழ்த்தரமான␢ வேசித்தனத்தையும் நான் கண்டேன்;␢ ஐயகோ! எருசலேமே!␢ நீ தூய்மை பெறுவது எந்நாளோ?⁾Jeremiah 13 ERV IRV TRV