Isaiah 23 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு:␢ தர்சீசின் மரக் கப்பல்களே கதறி␢ அழுங்கள்;␢ தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும்␢ வருவார் போவார் இல்லாதபடிக்கும்␢ பாழாய்ப் போய்விட்டது;␢ சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி␢ அவர்களை வந்தடைகின்றது.⁾2 ⁽கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,␢ வாய் திறவாதீர்; உங்கள் தூதர்␢ கடல்கடந்து வந்தனர்.⁾3 ⁽பல இனத்தாரோடும்␢ நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;␢ சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில்␢ விளைந்த தானியமும்,␢ நைல் நதியின் அறுவடையுமே␢ உங்கள் வருமானம்.⁾4 ⁽சீதோனே, வெட்கப்படு; ‘␢ நான் பேறுகால வேதனை அடையவில்லை;␢ பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை;␢ இளைஞரைப் பேணவுமில்லை;␢ கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை’␢ என்று கடல் சொல்கின்றது;␢ கடற்கோட்டை கூறுகின்றது.⁾5 ⁽இச்செய்தி எகிப்தை எட்டும்போது,␢ தீர்நாட்டின் நிலையைக் கேட்டு␢ அவர்கள் நடுங்குவார்கள்.⁾6 ⁽கடற்கரை நாட்டில் வாழ்வோரே,␢ தர்சீசுக்குக் கடந்து சென்று␢ கதறியழுங்கள்.⁾7 ⁽பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,␢ களிப்புமிகுந்த நகர் இதுதானா?␢ தொலை தூரத்திற்குச் சென்று␢ குடியேறுமாறு அடியெடுத்து␢ வைத்த நகரா இது?⁾8 ⁽அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்␢ இளவரசர்களைப் போன்ற␢ வணிகரைக் கொண்டதும்,␢ உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப்␢ பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக␢ இதைத் திட்டமிட்டது யார்?⁾9 ⁽செருக்குற்றோர் சீர்குலையவும்,␢ நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும்␢ அவமதிப்பு அடையவும்␢ படைகளின் ஆண்டவர்␢ இதைத் திட்டமிட்டார்.⁾10 ⁽தர்சீசின் மகளே, உன் நிலத்தை␢ உழுது பண்படுத்து;␢ இனி இங்குத் துறைமுகமே இராது.⁾11 ⁽கடலுக்கு மேலாக ஆண்டவர்␢ தம் கையை ஓங்கியுள்ளார்;␢ கானானின் ஆற்றல்மிக்க␢ புகலிடங்களை அழிக்குமாறு␢ ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.⁾12 ⁽“ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய␢ கன்னிப்பெண்ணே,␢ இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய்,␢ எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ;␢ அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்”␢ என்கிறார் அவர்.⁾13 இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.⒫14 தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.⒫15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:16 ⁽“மறக்கப்பட்ட விலைமாதே!␢ யாழினைக் கையிலெடுத்து,␢ நகரைச் சுற்றி வலம் வா.␢ உன் நினைவு நிலைக்குமாறு␢ இன்னிசை மீட்டு; பண் பல பாடு.”⁾17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர் நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.18 ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்துவைக்கப்படுவதுமில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.