Vinnnappam Kaetpavarae Chords

விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீரை காண்பவரே
ஜெபம் கேளும் பதில் தாரும்
ஜெபம் கேளும் பதில் தாரும்
ஜெபம் கேளும் பதில் தாரும்
ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே
உமதாவி என்னுள்ளில் இறங்கட்டுமே – 2
மடை திறந்து வெள்ளம் போல
ஊற்றவேண்டுமே
கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய்
மாற வேண்டுமே
– ஜெபம் கேளும்
பலகோடி ஆத்துமாக்கள் அழிகின்றதே
அவர் பேரில் பரிதவிக்க யாருமில்லையே
ஜெப ஆவி எனதுள்ளே இறங்கவேண்டுமே
திறப்பில் நின்று ஜெபிப்பவராய் மாற வேண்டுமே
– ஜெபம் கேளும்
மழை வேண்டி பூமியெல்லாம் காத்திருக்குதே
நிலை மாற எனதுள்ளம் ஏங்குகின்றதே – 2
பெருமழை வானம் திறந்து ஊற்றவேண்டுமே
வறட்சியெல்லாம் செழிப்பாக மாறவேண்டுமே
– ஜெபம் கேளும்


Vinnnappam Kaetpavarae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்