யோபு 8

fullscreen1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

fullscreen2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்.

fullscreen3 தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

fullscreen4 உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,

fullscreen5 நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து,

fullscreen6 சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

fullscreen7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

fullscreen8 ஆகையால், நீர் முந்தி தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.

fullscreen9 நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

fullscreen10 அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவா?

fullscreen11 சேறில்லாமல நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?

fullscreen12 அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?

fullscreen13 தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம்.

fullscreen14 அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.

fullscreen15 ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது; அதைப் பிடித்தால், அது நிற்காது.

fullscreen16 வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைக்கொடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்.

fullscreen17 அதின் வேர்கள் கற்குவியலில்சிக்கி கற்பாறையை நாடும்.

fullscreen18 அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும்.

fullscreen19 இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.

fullscreen20 இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

fullscreen21 இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.

fullscreen22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர்.

Thiru Viviliam
எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர்.

Title
இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை

Other Title
சீனாய் மலையருகில் இஸ்ரயேலர்

Exodus 19Exodus 19:2

King James Version (KJV)
In the third month, when the children of Israel were gone forth out of the land of Egypt, the same day came they into the wilderness of Sinai.

American Standard Version (ASV)
In the third month after the children of Israel were gone forth out of the land of Egypt, the same day came they into the wilderness of Sinai.

Bible in Basic English (BBE)
In the third month after the children of Israel went out from Egypt, on the same day, they came into the waste land of Sinai.

Darby English Bible (DBY)
In the third month after the departure of the children of Israel out of the land of Egypt, the same day came they [into] the wilderness of Sinai:

Webster’s Bible (WBT)
In the third month, when the children of Israel had gone forth from the land of Egypt, the same day they came into the wilderness of Sinai.

World English Bible (WEB)
In the third month after the children of Israel had gone forth out of the land of Egypt, on that same day they came into the wilderness of Sinai.

Young’s Literal Translation (YLT)
In the third month of the going out of the sons of Israel from the land of Egypt, in this day they have come into the wilderness of Sinai,

யாத்திராகமம் Exodus 19:1
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
In the third month, when the children of Israel were gone forth out of the land of Egypt, the same day came they into the wilderness of Sinai.

In
the
third
בַּחֹ֙דֶשׁ֙baḥōdešba-HOH-DESH
month,
הַשְּׁלִישִׁ֔יhaššĕlîšîha-sheh-lee-SHEE
when
the
children
לְצֵ֥אתlĕṣētleh-TSATE
Israel
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
were
gone
forth
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
land
the
of
out
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
of
Egypt,
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
the
same
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַזֶּ֔הhazzeha-ZEH
came
בָּ֖אוּbāʾûBA-oo
they
into
the
wilderness
מִדְבַּ֥רmidbarmeed-BAHR
of
Sinai.
סִינָֽי׃sînāysee-NAI