1 Corinthians 9:17
நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
2 Chronicles 17:16அவனுக்கு உதவியாக கர்த்தருக்குக் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
Ezekiel 46:12அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.
Psalm 51:12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,