Ezekiel 8:16
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
Ezekiel 40:44உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.
Ezekiel 45:19பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின வாசல்நிலைகளிலும் பூசக்கடவன்.
Ezekiel 40:19பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.
Ezekiel 43:5அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
Ezekiel 42:3உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது.
Ezekiel 44:17உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனைசெய்கையில் ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது.