யோபு 10

fullscreen1 என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

fullscreen2 நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும் நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.

fullscreen3 நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?

fullscreen4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?

fullscreen5 நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்துவிசாரிக்கிறதற்கு,

fullscreen6 உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?

fullscreen7 நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.

fullscreen8 உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

fullscreen9 களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

fullscreen10 நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?

fullscreen11 தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.

fullscreen12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு ஆவியைக் காப்பாற்றினது.

fullscreen13 இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும் இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.

fullscreen14 நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.

fullscreen15 நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.

fullscreen16 சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்ண்ணுகிறீர்.

fullscreen17 நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.

fullscreen18 நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.

fullscreen19 நான் ஒருக்காலும் இல்லாததுபோலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.

fullscreen20 என் நாட்கள் கொஞ்சமல்லவோ?

fullscreen21 காரிருளும் மரணாந்தகாரமுள்ள தேசமும், இருள் சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு நான் போகுமுன்னே,

fullscreen22 நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

Tamil Indian Revised Version
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கும் உதவினார்! கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார்.

Thiru Viviliam
⁽உயரத்தினின்று அவர் என்னை␢ எட்டிப் பிடித்துக் கொண்டார்;␢ வெள்ளப் பெருக்கினின்று␢ என்னைக் காப்பாற்றினார்.⁾

2 சாமுவேல் 22:162 சாமுவேல் 222 சாமுவேல் 22:18

King James Version (KJV)
He sent from above, he took me; he drew me out of many waters;

American Standard Version (ASV)
He sent from on high, he took me; He drew me out of many waters;

Bible in Basic English (BBE)
He sent from on high, he took me, pulling me out of great waters.

Darby English Bible (DBY)
He reached forth from above, he took me, He drew me out of great waters;

Webster’s Bible (WBT)
He sent from above, he took me; he drew me out of many waters;

World English Bible (WEB)
He sent from on high, he took me; He drew me out of many waters;

Young’s Literal Translation (YLT)
He sendeth from above — He taketh me, He draweth me out of many waters.

2 சாமுவேல் 2 Samuel 22:17
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
He sent from above, he took me; he drew me out of many waters;

He
sent
יִשְׁלַ֥חyišlaḥyeesh-LAHK
from
above,
מִמָּר֖וֹםmimmārômmee-ma-ROME
he
took
יִקָּחֵ֑נִיyiqqāḥēnîyee-ka-HAY-nee
drew
he
me;
יַֽמְשֵׁ֖נִיyamšēnîyahm-SHAY-nee
me
out
of
many
מִמַּ֥יִםmimmayimmee-MA-yeem
waters;
רַבִּֽים׃rabbîmra-BEEM