Thanthaanaith Thuthippomae in D Scale

தந்தானைத் துதிப்போமே-திருச்
சபையோரே கவி -பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்
-தந்தானை
ஒய்யாரத்துச் சீயோனே -நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்
-தந்தானை
கண்ணாரக் களித்தாயே -நன்மை
காட்சியைக் கண்டு ருசித்து புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே
-தந்தானை
சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்
-தந்தானை
தூரம் திரிந்த சீயோனே -உனை
தூக்கியெடுத்தக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அந்தன் மணவாட்டி யாக்கினது என்னை
-தந்தானை


Thanthaanaith Thuthippomae Chords for Keyboard, Guitar and Piano

Thanthaanaith Thuthippomae Chords in D Scale

தமிழ்