Appaa Ummai Naesikkiraen Chords

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே அப்பா
பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா ஐயா
உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா ஐயா
கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே அப்பா
அநுதின உணவு நீர்தானையா என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா எனக்கு
ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா ஐயா
ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்


Appaa Ummai Naesikkiraen Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்