Anpae, Anpae, Anpae Chords

அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே
ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளெனை வெறுத்தேனையா!
உம்தயை பெரிதையா
என்மேல் உம்தயை பெரிதையா
…அன்பே
பரலோகத்தின் அருமைப் பொருளே!
நரலோகத்தின் அன்பேன் ஜயா!
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ ?
…அன்பே
அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே; – எனையும்
அணைத்தீர் அன்பாலே!
…அன்பே
பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஜயா! - அன்பு
வாடாதே ஜயா!
…அன்பே


Anpae, Anpae, Anpae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்