Aayiram Varuda Arasaatchiyae in B♭ Scale

B♭ = A♯

ஆயிரம் வருட அரசாட்சியே
பரிசுத்தவாங்களின் இராஜ்ஜியமே
பரம பிதா வேத வாக்கிதே
பசுமை பொற்காலம் வருகின்றதே
பசுவும் கரடியும் கூடி புல் மேயுமே
புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும்
ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும்
ஒரு சிறு பையனே நடத்திடுவான்
…ஆயிரம் வருட
இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை
இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
குழந்தையின் கரங்கள் பாம்பின் மண் புதரில்
களங்கம் பயமின்றி விளையாடுமே
…ஆயிரம் வருட
வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
விருட்சங்கள் இனிய கனி தருமே
அமைதியும் நிலவும் சுக வாழ்வு துளிர்க்கும்
அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே
…ஆயிரம் வருட
கிறிஸ்தேசு ராஜா புவி ஆளுவார்
கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே
பரிபூர்ணமடைந்த மெய் தூய பக்தர்கள்
பரனோடு நீடுழி அரசாளவே
…ஆயிரம் வருட


Aayiram Varuda Arasaatchiyae Chords for Keyboard, Guitar and Piano

Aayiram Varuda Arasaatchiyae Chords in B♭ Scale

தமிழ்