ஆத்ம நேசரே எந்தன் பிரியமே
உம்மை தேடினேன் வந்திடுவீர்
இன்பமே எந்தன் சொந்தமே
நானுமே உந்தன் சொந்தமே
அன்பரே எந்தன் மீட்பரே
வீரமே எந்தன் வெற்றியே
வாருமே உம்மை பாடுவேன் – 2
தலை முடியும் தங்க நிறமே
அலை போன்ற கருள் முடியே
கண்கள் புறு கண்கள் போன்றதே
கன்னம் சுகந்த வர்க்கமாகும்
உதடு லீலி புஷ்பமாகும்
அன்பர் நேசம் எனக்கு இன்பமே
பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்
செளந்தர்யமானவரே – 2
…ஆத்ம நேசரே
கை படிகைப்பச்சை பொன் வளையல்
அங்கம் ரத்தினம் பதித்த தந்தம்
கால்கள் பசும் பொன்னைப் போன்றதே
ரூபம் லீபனோன் போன்றதே
வாய் மிகவும் மதுரமானதே
உந்தன் நேசம் எனக்கு இன்பமே
பதினாயிரம் பேர்களிலும் எந்தன் நேசர்
செளந்தர்யமானவரே – 2
…ஆத்ம நேசரே
Aathma Naesarae Enthan Chords for Keyboard, Guitar and Piano