Uthiththaarae Nalla Maeyppar Chords

உதித்தாரே நல்ல மேய்ப்பர்
புல்லணை மீதினிலே
விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த
என் பாலகன் இவர் தானே
விண்ணிலே தேவனுக்கே மகிமை
பூமியில் நல் சமாதானம்
மனித நேயம் பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக
மந்தையை காத்த மேய்ப்பர்களும்
சிந்தையில் சிறந்த ஞானியரும்
ஆதனைச் சென்று பணிந்தனரே
நல் காணிக்கை அவருக்கு படைத்தனரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே
பூமியில் வந்த அதிசயமே
—உதித்தாரே
எண்ணிலடங்கா நன்றியுடன்
அவரைப் போற்றித் துதித்திடுவோம்
அன்பே அவரின் திருமொழியாம்
அன்பில் சிறந்த போதகராய்
நம்மை அணைத்து காத்திடவே
ஏழையின் கோலம் எடுத்தாரே
விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே
எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே
மன்னவர் இயேசு பிறந்த நாளில்
வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம்
—உதித்தாரே


Uthiththaarae Nalla Maeyppar Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்