சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்தத்தினால்
ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்
ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்
… சங்கரிப்பேன்
வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்து விடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன்
… சங்கரிப்பேன்
சுற்றி வரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடி போல்
சாம்பலாய்ப் போகின்றன
… சங்கரிப்பேன்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் (Miracle) நடக்கின்றது
… சங்கரிப்பேன்
சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்
… சங்கரிப்பேன்
நல்லவர் கர்த்தர் என்று
எல்லோரும் துதித்திடுவோம்
என்றென்றும் அவர் கிருபை
நம்மேலே இருக்கின்றது
… சங்கரிப்பேன்
கர்த்தர் என் பெலனானார்
நான் பாடும் பாடலானார்
நல்லோரின் குடும்பங்களில்
நாளெல்லாம் கொண்டாட்டமே
… சங்கரிப்பேன்
தூக்கி எறிந்தார்கள்
வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ உதவி செய்தார்
தூணாக துணை நின்றார்
… சங்கரிப்பேன்
Sangarippaen Sangarippaen Chords for Keyboard, Guitar and Piano