Kodum Kolkothaavin Kodu Mutiyil in C♯ Scale

கொடும் கொல்கோதாவின் கொடு முடியில்
கடும் காயப்பட்ட நேசரைக் கண்டேன்
ஆஹா பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
ஆஹா இன்பம் இன்பம் இன்பம்
இனி துன்பமொன்றுமில்லை
எந்தன் மகா இன்ப ராஜன்
இயேசு வரும் நாள்தனிலே
இனி நான் என்னச் செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்கும் காலம் சமீபம் என்றார்
…ஆஹா இன்பம்
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கித் தாபரிக்கும் காட்சி கண்டேன் – இந்த
சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்திரவத்தில் நிலைத்தோர் என்றார்
…ஆஹா இன்பம்
துதி பாடிடும் தூதர் கணம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
துங்கன் இயேசுவின் தூய பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும்
…ஆஹா இன்பம்
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன்.
…ஆஹா இன்பம்


Kodum Kolkothaavin Kodu Mutiyil Chords for Keyboard, Guitar and Piano

Kodum Kolkothaavin Kodu Mutiyil Chords in C♯ Scale

தமிழ்