Alaiththeerae Yesuvae in C♯ Scale

அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே
பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு
வருகை வரை-அன்பின்
மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்
–அழைத்தீரே
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
என் துயர தொனியோ இதை
யார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேன் இதோ
—–அழைத்தீரே
என்ன தான் தீங்கு நான் இழைத்தேன்
என்னை விட்டோடும் என் ஜனமே
எத்தனை நன்மைகளோ
உனக்காக நான் செய்தேனல்லோ
என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
எப்படி நான் மறப்பேன்
—அழைத்தீரே
ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசா பாசங்கள் பெருகிடுதே
ஆயிரம் ஆயிரமே நரக வழி போகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும்
—அழைத்தீரே


Alaiththeerae Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Alaiththeerae Yesuvae Chords in C♯ Scale

தமிழ்