அதற்குப் பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,
தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்.
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தைவிடாமல் அழுதான்.
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
| And he sent | וְאֶת | wĕʾet | veh-ET |
| Judah | יְהוּדָ֞ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| before him | שָׁלַ֤ח | šālaḥ | sha-LAHK |
| unto | לְפָנָיו֙ | lĕpānāyw | leh-fa-nav |
| Joseph, | אֶל | ʾel | el |
| to direct | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
| his face | לְהוֹרֹ֥ת | lĕhôrōt | leh-hoh-ROTE |
| unto Goshen; | לְפָנָ֖יו | lĕpānāyw | leh-fa-NAV |
| and they came | גֹּ֑שְׁנָה | gōšĕnâ | ɡOH-sheh-na |
| into the land | וַיָּבֹ֖אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| of Goshen. | אַ֥רְצָה | ʾarṣâ | AR-tsa |
| גֹּֽשֶׁן׃ | gōšen | ɡOH-shen |