Ennai Naesikkintayaa in C Scale

என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியைக் கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஒடி வந்தேன் மானிடனாய்
-என்னை
பாவத்தின் கொடூரத்தைப் பார்
பாதத்தின் முடிவினைப் பார்
பரிகாச சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
-என்னை
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கின்றேன் பார்
பாவ பாரம் யாவும் சுமப்பேனென்றேன்
பாதம் தன்னில் இளைப்பாறவா
-என்னை
உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமால் இருப்பேனோ?
-என்னை


Ennai Naesikkintayaa Chords for Keyboard, Guitar and Piano

Ennai Naesikkintayaa Chords in C Scale

தமிழ்