Aiyaa Umathu Siththam in C Scale

ஐயா உமது சித்தம்
ஆகிடவே வேணும்
மெய்யாய் எனது சித்தம்
வெகுமோசமே காணும்
ஆடுபோல் வழிதப்பி
அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக்
கிறிஸ்துமேல் சுமத்தினீர்
…ஐயா
ஜீவனோ, மரணமோ,
செல்வமோ வறுமையோ
யாவிலெனை நிறுத்த
தேவரீர் நினைக்கணும்
…ஐயா
வசை, இசை, பகை, நேசம்,
வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம் நாசம்
பாடு, நோயடைகினும்
…ஐயா
எண்ணம் வாய்க்காததால்
எத்தனை துயர்கொண்டேன்
பொன்னடிக் கீழடங்கிப்
புகழுமக்கென்று வாழ்வேன்
…ஐயா
குயவன் கைக் களிமண்ணாய்க்,
குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த
ஞானமுள்ள பிதாவே!
…ஐயா


Aiyaa Umathu Siththam Chords for Keyboard, Guitar and Piano

Aiyaa Umathu Siththam Chords in C Scale

தமிழ்