இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின் கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
| And the slain | וְנָפַ֥ל | wĕnāpal | veh-na-FAHL |
| shall fall | חָלָ֖ל | ḥālāl | ha-LAHL |
| in the midst | בְּתֽוֹכְכֶ֑ם | bĕtôkĕkem | beh-toh-heh-HEM |
| of you, and ye shall know | וִֽידַעְתֶּ֖ם | wîdaʿtem | vee-da-TEM |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |