Ezekiel 19 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 “நீயோ, இஸ்ரயேலின் தலைவர்களைப்பற்றிப் புலம்பல் பாடி,2 ⁽சொல்: சிங்கங்களின் நடுவில்␢ எப்படிப்பட்ட பெண் சிங்கமாய்த்␢ திகழ்ந்தவள் உன் தாய்!␢ இளஞ்சிங்கங்களிடையே இருந்து␢ அவள் தன் குட்டிகளை வளர்த்தாள்.⁾3 ⁽அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று␢ இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது;␢ அது இரை தேடப் பழகி,␢ மனிதரைத் தின்னலாயிற்று.⁾4 ⁽வேற்றினத்தார்␢ அதனைப்பற்றிக் கேள்வியுற்று,␢ அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்;␢ அதனைச் சங்கிலிகளால் கட்டி␢ எகிப்துக்குக் கொண்டு போயினர்.⁾5 ⁽தாய்ச்சிங்கமோ,␢ தான் நம்பிக்கையோடு காத்திருந்தது␢ வீணாயிற்று என்று கண்டாள்;␢ எனவே தன் குட்டிகளுள்␢ வேறொன்றை எடுத்து␢ அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக␢ உருவாக்கினாள்.⁾6 ⁽அது சிங்கங்களோடு நடமாடி␢ ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று;␢ அது இரை தேடப் பழகி,␢ மனிதரைத் தின்னலாயிற்று.⁾7 ⁽அது கோட்டைகளைத் தாக்கி,␢ நகர்களைச் சூறையாடிற்று;␢ அதன் கர்ச்சிக்கும் ஒலி␢ கேட்டபோதெல்லாம்␢ நாடும் அதிலுள்ளயாவும் திகிலுற்றன.⁾8 ⁽அண்டை நாடுகளிலிருந்து␢ வேற்றினத்தார் அதற்கெதிராக␢ எப்பக்கமும் எழுந்தனர்;␢ தங்கள் வலையை அதன்மீது வீச,␢ அது அவர்கள் குழியில் விழுந்தது.⁾9 ⁽அவர்கள் அதனைச் சங்கிலிகளால் கட்டி,␢ கூண்டிலடைத்து,␢ பாபிலோனின் மன்னனிடம்␢ கொண்டு வந்தனர்.␢ இனியும் அதன் கர்ச்சனை␢ இஸ்ரயேல் மலைகளின் மீது␢ ஒலிக்காதபடி␢ அரண்களுக்குள் அதனை␢ அடைத்து வைத்தனர்.⁾10 ⁽திராட்சைத் தோட்டத்தில்␢ நீரருகே நடப்பட்ட␢ திராட்சைக் கொடிபோல் இருந்தாள்␢ உன் தாய்;␢ மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால்␢ அது கிளைகளும் கனிகளுமாகத்␢ தழைத்திருந்தது.⁾11 ⁽அரச செங்கோலுக்கேற்ற␢ உறுதியான கிளைகள் அதற்கிருந்தன;␢ அடர்ந்த கிளைகள் நடுவே␢ அது உயர்ந்தோங்கிற்று.␢ திரளான கிளைகளோடு␢ அது உயர்ந்து தென்பட்டது.⁾12 ⁽ஆனால், அது␢ சினத்தோடு பிடுங்கப்பட்டு␢ தலையிலே எறியப்பட்டது;␢ கீழைக் காற்றினால் அது␢ காய்ந்து போனது;␢ அதன் கனி உதிர்ந்து போயிற்று;␢ தண்டு உலர்ந்து தீக்கிரையாயிற்று.⁾13 ⁽இப்போதோ,␢ அது பாலை நிலத்தில், வறண்ட,␢ நீரற்ற நிலப்பரப்பில் நடப்பட்டுள்ளது.⁾14 ⁽அதன் தண்டிலிருந்து நெருப்பு கிளம்பி␢ அதன் கிளைகளையும்␢ கனிகளையும் சுட்டெரித்தது;␢ அரச செங்கோலாயிருக்கத்தக்க␢ உறுதியான தண்டு␢ இனி அதில் தோன்றாது.␢ இதுவே புலம்பல்;␢ இதனை இரங்கற்பாவவெனக் கொள்க.⁾