இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்
இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்து பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்திரிப்பேன்
அன்பு பாராட்டி காப்பவராம்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்
…இயேசுவை நம்பி
மெய் சமாதானம் ரம்மியமும்
துய்ய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்து விட்டார்
விண்ணிலும் சேர்த்து வாழச் செய்வார்
…இயேசுவை நம்பி
என்னையே முற்றும் மாற்றிடவே
உன்னத பெலன் ஈந்தருளும்
கண்ணிகளில் நான் சிக்கிடாமல்
கண்மணி போல காத்தருளும்
…இயேசுவை நம்பி
Yesuvai Nampi Pattikkonntaen Chords for Keyboard, Guitar and Piano