தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் என்னைப் பைம்புன்மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்
ஆத்துமந்தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி யென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
—தேவ பிதா
சா நிழல் பள்ள்த் திறங்கிடினும்
சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
—தேவ பிதா
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுபமாய் அபிஷேகம் செய்குவார்
—தேவ பிதா
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்
—தேவ பிதா
Thaeva Pithaa Enthan Maeyppan Allo Chords for Keyboard, Guitar and Piano