நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்துவீர்
என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர்
…நான் உம்மை
நல் வாசல்கள் திறந்திட
உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட
கர்த்தனே அருள் செய்வீர்
…நான் உம்மை
உம் நியாயங்கள் நிறைவேற
உம் வேளைக்காக வந்தோம்
தேவனே ராஜனே
ஜெயமதை தந்திடுவீர்
…நான் உம்மை
என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர்
…நான் உம்மை
உம் கைகள் எமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம்
…நான் உம்மை
Naan Ummai Uruthiyaaka Chords for Keyboard, Guitar and Piano