கனியிலும் அதிமதுரம்
இயேசுவின் நாமம்
மனிதரில் பேரின்பம் அது நளத்
தைலத்திலும் விலையுயர்ந்த
உடைந்திட்ட நறுமணம்
ஊற்றுண்ட பரிமளம் – 2
மணம் வீசும் கமழ் கொண்ட
வாசனை தைலம்
ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமே – 2
நாசியில் சுவாசமுள்ள மனுசர்கள் யாவரும்
நேசித்து சுவாசிக்கும் உயிர் மூச்சென் ஏசுவே
கந்த வர்க்கம் நளத் தைலம்
லீபனோனின் வாசனை வீசும்
வெள்ளை போளம் பரிமளமே
சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலி
உள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன்
– கனியிலும்
கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல
வாசனை வீசிடும் லீலி புஷ்பமே – 2
கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல – 2
அங்கமோ இந்திர நீல
இரத்தினம் இழைத்த பிரகாசம் – 2
கால்கள் பொன் ஆதார
வெள்ளை கல்தூண்கள்
ரூபம் லீபனோனின் கேதுரு போல
பாலின் கழுவின் அழகு கண்கள்
மதுரம் ஆனவர் இனிமை ஆனவர்
இவரே எந்தன் பிரியமானவர்
– கனியிலும்
Kaniyilum Athimathuram Chords for Keyboard, Guitar and Piano