அப்பா உம் சமுகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா
தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப் போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர் (2)
…அப்பா உம்
கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
…அப்பா உம்
எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்
…அப்பா உம்
Appaa Um Samukaththilae Chords for Keyboard, Guitar and Piano