ஆதி தெய்வம் இயேசு
அன்பு தெய்வம் இயேசு
அல்ஃபா ஒமேகா அவரே Em
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு
அல்ஃபா ஒமேகா தானே இயேசு (2) – (ஆதி)
என்னை கருவினில் தெரிந்து கொண்டவர்
என்னை பேர் சொல்லி அழைத்தவர் அவரே (2)
சேற்றினில் கிடந்த என்னை தூக்கி எடுத்தவர் (2)
என்னை மாற்றி மகிமை படுத்துகின்றவர் (2) – (இயேசு)
வியாதிகளை போக்க வல்லவர்
தீரா நோய்களையும் தீர்க்க வல்லவர் (2)
பேய் பிசாசு தந்திரங்கள் அழிக்கவல்லவர் (2)
நன்மை செய்பவராய் சுற்றிதிரிந்தவர் (2)
– (இயேசு)
மனித உருவில் வந்து உதித்தவர்
மரித்து உயிர்த்து ஜெயித்து எழுந்தவர் (2)
மண்ணுலகில் விண்ணவராய் இருந்து மகிழ்ந்தவர் (2)
இன்று பரலோகத்தில் வீற்றி மகிழ்பவர் (2)
– (இயேசு)
Aathi Theyvam Yesu Chords for Keyboard, Guitar and Piano