Ulakin Oliyae Yesuvae in F♯ Scale

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாய்
அன்பின் தெய்வம் வேறு இல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்
இயேசு நல்லவரே இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்
…உலகின் ஒளியே
பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய்
…உலகின் ஒளியே
பயங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை
…உலகின் ஒளியே
தேவ மைந்தனாய் வந்தவர்
மாளும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே
…உலகின் ஒளியே


Ulakin Oliyae Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Ulakin Oliyae Yesuvae Chords in F♯ Scale

தமிழ்