En Anpae in D♯ Scale

என் அன்பே, என் அன்பே
என் அன்பே, என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மை பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்
பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையை போல உம்மிடம் வந்து
பேசிட விரும்புகிறேன்
…என் அன்பே
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்
…என் அன்பே
வாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த
அன்பை பாடுகிறேன்
…என் அன்பே
நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு
முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
இரகசியம் பேசிடுவேன்
…என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மை பார்த்து
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கின்றேன்
…என் அன்பே


En Anpae Chords for Keyboard, Guitar and Piano

En Anpae Chords in D♯ Scale

தமிழ்