Koti Koti Nanmaikal in C♯ Scale

கோடி கோடி நன்மைகள்
பெற்றதை நினைத்திடுவேன்
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
அன்பரைத் துதித்திடுவேன் – என்
அன்பே அன்பரைத் துதித்திடுவேன்
அன்பை எனக்கு தந்ததால்
அறிவை எனக்கு தந்ததால்
கிருபை எனக்கு தந்ததால்
மகிமையில் என்னை நடத்தியதால்
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென்… - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் … – 3
வாழ்வு எனக்கு தந்ததால்
தாழ்வில் என்னை நினைத்ததால்
உள்ளம் நிறைந்த துதியுடன்
உன்னதர் உம்மைப் புகழ்ந்திடுவேன்
– அல்லேலூயா
உன்னதர் உந்தன் மறைவிலே
வல்லவர் செட்டைகளின் நிழலிலே
ஏற்றக்காலத்தில் உயர்த்திடும்
அற்புதர் கரத்தில் அடங்கிடுவேன்
– அல்லேலூயா
வாழ்நாளை கூட்டி தந்ததால்
வருகையில் சேர்ப்பேன் என்றதால்
மறைவான மன்னாவைத் தந்ததால்
மறுரூபமாக்கி மகிழ்வித்ததால்
– அல்லேலூயா
துன்பங்கள் மறைந்திட செய்ததால்
இன்பமாய் வாழ்ந்திட வைத்ததால்
கானானின் பயணத்தில்
கர்த்தர் தம் கரத்தினில்
தாங்கியே என்னை நடத்தியதால்
– அல்லேலூயா


Koti Koti Nanmaikal Chords for Keyboard, Guitar and Piano

Koti Koti Nanmaikal Chords in C♯ Scale

தமிழ்