Ukantha Kaannikkaiyaay in D Scale

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
உகர்ந்து மகிழுமையா
தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் உகந்த
வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் என்
அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாகப் பயன்படுத்தும்


Ukantha Kaannikkaiyaay Chords for Keyboard, Guitar and Piano

Ukantha Kaannikkaiyaay Chords in D Scale

தமிழ்