வல்ல தேவனை இன்றே
துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்
மாறாத இயேசுவின் கிருபையில்
என்றும் வளர்ந்திடுவோம்
பாவங்களில் உழன்றிருந்த
நம்மை இயேசு உய்த்திடவே
கிருபையின் விடுதலை
அளித்துமே அன்பு செய்தார்
…வல்ல
பூரணமாய் செயல் தனிலே
வளர்ந்து நாமே கிரியை செய்ய
கிருபையில் பெருகிட
அருள்தனை தந்திடுவார்
…வல்ல
போதனையை பகுத்தறிந்து
வேதத்தை நாமே அறிந்திடுவோம்
கிருபையில் பெருகிட
அருள்தனை தந்திடுவார்
…வல்ல
துன்பங்களோ சோதனையோ
சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல்
கிருபையே போதுமே
சொந்தமாய் தாங்கிடுவார்
…வல்ல
Valla Thaevanai Inte Chords for Keyboard, Guitar and Piano