போற்றுவோமே போற்றுவோமே எம்
தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே
…போற்றுவோமே
துங்கன் ஏசுவே தூயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகமும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிட வேண்டும்
…போற்றுவோமே
ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
தூக்கி எடுத்தோனே
ஆழி தன்னிலெம் பாவ மெறிந்த
அன்பன் உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மண்ணதினிலே
…போற்றுவோமே
பாவம் போக்கியே சாபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சித்திகரித்த
தூய வேந்தனே
தூய நேயா காய மாற்றியே
கருணாநிதியே பரிகாரியே
…போற்றுவோமே
பாரி லென்னையே பிர்த் தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈர்த்திட
அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க
…போற்றுவோமே
பூர்ணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன்
…போற்றுவோமே
Pottuvomae Pottuvomae Chords for Keyboard, Guitar and Piano