பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா ஜோதியாய் வளர்ந்தார்
மா ஜோதியாய் வளர்ந்தார்
-பிறந்தார்
பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மாஜோதியாய்த் திகழ்ந்தார்
மாஜோதியாய்த் திகழ்ந்தார்
-பிறந்தார்
கந்தை துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மை கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் அசையும் நமக்கேன்
வீண் அசையும் நமக்கேன்
-பிறந்தார்
குருவைத் தொடரும் சீஷர்களும்
குரு போல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
அவர் பாதையில் நடப்போம்
-பிறந்தார்
Piranthaar Piranthaar Chords for Keyboard, Guitar and Piano