Nampaththakka Thakappanae in F♯ Scale

நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து (உம்)
வார்த்தையால் வாழ்கின்றேன்
– வாழ்வே
இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் – என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
– வாழ்வே
நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் – என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்
– வாழ்வே


Nampaththakka Thakappanae Chords for Keyboard, Guitar and Piano

Nampaththakka Thakappanae Chords in F♯ Scale

தமிழ்