பயப்படாதே பாரில் இப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன்
பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்துகொண்டேன் நீ என்னுடையவன்
தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை
…பயப்படாதே
அக்கினியில் நீ நடக்கும் போது
அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாது
விக்கினங்கள் ஏதும் சுற்றாது
…பயப்படாதே
இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே
இரட்சகரான தேவனே
உன்னை மீட்க நான் வந்தேனே
கண்மணி போல் அருமையானவனே
…பயப்படாதே
உன்னை நானே உருவாக்கினேன்
அன்னை போல ஆதரிப்பேனே
கண்ணை மூடாமல் காப்பேனே
சொன்னதை நிறைவேற்றுவேனே
…பயப்படாதே
Payappadaathae Paaril Ippothae Chords for Keyboard, Guitar and Piano