ஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே
சிறுவந் தொட்டுனையொரு
செல்லப் பிள்ளைபோல் காத்த
உரிமைத் தந்தையென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை
கப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறும் உன் சத்தம் கேட்டால்
கடல் புசல் அமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு
ஏற்ற தந்தை நானென்பார்
–ஒரு போதும்
கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயே
விடுவாளோ பிள்ளையை தாய்
மேதினியில் தனியே – மெய்ப் பரனை
நீ தினம் விசுவாசித்திருபாயே
–ஒரு போதும்
உன்னாசை விசுவாசம் ஜெபமும்
வீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்
உன்னைவிட் டொழியுமா-இந் நில
மீதிலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர் மனம்
உருக்கமில்லாதே போமா?
–ஒரு போதும்
உலகப் பேயுடலாசை
உன்னை மோசம் செய்யாது-ஊக்கம்
விடாதே திரு வுளமுனை மறவாது
இலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
என்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து
–ஒரு போதும்
Oru Pothum Maravaatha Chords for Keyboard, Guitar and Piano