எலியாவின் பலிபீடத்தில்
இறங்கின அக்கினியே
எங்கள் தேசத்திலே இப்பொழுதே
இறங்கும் தெய்வமே
அபிஷேகம் அபிஷேகம்
இப்போ தாரும் தெய்வமே
அக்கினி அக்கினியாய்
என்னை மாற்றும் தெய்வமே
மோசேயை வனாந்திரத்தில்
சந்தித்த அக்கினியே
என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால்
சந்தியும் தெய்வமே
…அபிஷேகம்
ஏசாயாவை அக்கினியால்
தொட்ட என் தெய்வமே
என் வாலிபத்தையும் உங்க அக்கினியால்
தொட்டு விடும் தெய்வமே
…அபிஷேகம்
தாவீதையும் அபிஷேகத்தால்
நிரப்பின தெய்வமே
என் பாத்திரமும் அபிஷேகத்தால்
நிரம்பி வழியணுமே
…அபிஷேகம்
உலர்ந்து போன எலும்புகளை
உயிர்பித்து அக்கினியே
உலர்ந்து போன என் வாழ்க்கையையும்
உயிர்ப்பியும் தெய்வமே
…அபிஷேகம்
Eliyaavin Palipeedaththil Chords for Keyboard, Guitar and Piano