நெகேமியா 7

fullscreen1 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,

fullscreen2 நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

fullscreen3 அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.

fullscreen4 பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.

fullscreen5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,

fullscreen6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,

fullscreen7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:

fullscreen8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

fullscreen10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

fullscreen12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

fullscreen13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர்.

fullscreen14 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

fullscreen15 பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

fullscreen16 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen17 அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்.

fullscreen18 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்.

fullscreen19 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர்.

fullscreen20 ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர்.

fullscreen21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.

fullscreen22 ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen23 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்.

fullscreen24 ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

fullscreen25 கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர்.

fullscreen26 பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

fullscreen27 ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

fullscreen28 பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர்.

fullscreen29 கீரியாத்யாரீம், கெபிராபேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

fullscreen30 ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.

fullscreen31 மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.

fullscreen32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர்.

fullscreen33 வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen34 மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.

fullscreen35 ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

fullscreen36 எரிகோ புத்திரர் முந்நூற்று அறுபத்தைந்துபேர்.

fullscreen37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.

fullscreen38 செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.

fullscreen39 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

fullscreen40 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

fullscreen41 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.

fullscreen42 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

fullscreen43 லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.

fullscreen44 பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.

fullscreen45 வாசல் காவலாளரானவர்கள்; சல்லுூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.

fullscreen46 நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,

fullscreen47 கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

fullscreen48 லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,

fullscreen49 ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,

fullscreen50 ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,

fullscreen51 காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,

fullscreen52 பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,

fullscreen53 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,

fullscreen54 பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

fullscreen55 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

fullscreen56 நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர்,

fullscreen57 சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,

fullscreen58 யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,

fullscreen59 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.

fullscreen60 நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

fullscreen61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

fullscreen62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

fullscreen63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.

fullscreen64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

fullscreen65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

fullscreen66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

fullscreen67 அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

fullscreen68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.

fullscreen69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

fullscreen70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும் ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.

fullscreen71 வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.

fullscreen72 மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

fullscreen73 ஆசாரியரும் லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும் நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

Tamil Easy Reading Version
வானத்துப் பறவைகளையும் சமுத்திரத்தில் நீந்தும் மீன்களையும் அவர்கள் ஆண்டனர்.

Thiru Viviliam
⁽வானத்துப் பறவைகள்,␢ கடல் மீன்கள்,␢ ஆழ்கடலில் நீந்திச் செல்லும்␢ உயிரினங்கள் அனைத்தையும்␢ அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.⁾

சங்கீதம் 8:7சங்கீதம் 8சங்கீதம் 8:9

King James Version (KJV)
The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas.

American Standard Version (ASV)
The birds of the heavens, and the fish of the sea, Whatsoever passeth through the paths of the seas.

Bible in Basic English (BBE)
The birds of the air and the fish of the sea, and whatever goes through the deep waters of the seas.

Darby English Bible (DBY)
The fowl of the heavens, and the fishes of the sea, [whatever] passeth through the paths of the seas.

Webster’s Bible (WBT)
All sheep and oxen, yes, and the beasts of the field;

World English Bible (WEB)
The birds of the sky, the fish of the sea, And whatever passes through the paths of the seas.

Young’s Literal Translation (YLT)
Bird of the heavens, and fish of the sea, Passing through the paths of the seas!

சங்கீதம் Psalm 8:8
ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas.

The
fowl
צִפּ֣וֹרṣippôrTSEE-pore
of
the
air,
שָׁ֭מַיִםšāmayimSHA-ma-yeem
and
the
fish
וּדְגֵ֣יûdĕgêoo-deh-ɡAY
sea,
the
of
הַיָּ֑םhayyāmha-YAHM
and
whatsoever
passeth
through
עֹ֝בֵ֗רʿōbērOH-VARE
paths
the
אָרְח֥וֹתʾorḥôtore-HOTE
of
the
seas.
יַמִּֽים׃yammîmya-MEEM