உலகின் ஒளியே வாழ்க
உயிர்ப்பிக்கும் தேவனே நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வாழ்க
பணிந்து போற்றுகின்றோம்
மகிமையாய் வெற்றி சிறந்தவரே
மாட்சிமை உள்ளவரே- உன்னதரே
உயர்ந்தவரே உண்மையுள்ளவரே
—உலகின்
சிலுவையில் வெற்றி சிறந்தவரே
சிலுவையின் நாயகரே- வல்லவரே
நல்லவரே அன்பு மிகுந்தவரே
—உலகின்
ஆதியும் அந்தமும் ஆனவரே
ஆதிசயமானவரே- அன்பரே
நண்பரே அற்புதமானவரே
—உலகின்
சாத்தானின் செயல்களை அழித்தவரே
சந்ததம் உள்ளவரே- சத்தியரே
சகாயரே சாவாமையுள்ளவரே
–உலகின்
சீக்கிரம் வருவேன் என்றவரே
சீயோனின் அதிபதியே- இனியவரே
பெரியவரே இரக்கமானவரே
—உலகின்
Ulakin Oliyae Vaalka Chords for Keyboard, Guitar and Piano