Eppoluthum Evvaelaiyum in E♭ Scale

E♭ = D♯

எப்பொழுதும் எவ்வேளையும்
நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் திருநாம்ம் உயர்த்திடுவேன்
உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
உம்மைப் பாடுவேன் சுகத்தோடு
தடுக்கி விழுந்த யாவரையும்
தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி நிறுத்தும் துணையாளரே
-உம்மைப்
நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
தகப்பன் அருகில் இருக்கின்றீர்
அஞ்சி நடப்போர் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் பரிசுத்தரே
-உம்மைப்
உணவுக்காக உயிரின்ங்கள
உம்மை நோக்கிப் பார்க்கின்றன
ஏற்ற வேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
-உம்மைப்
இரக்கம் கிருபை உடையவரே
கருணை அன்பு நிறைந்தவரே
நன்மை செய்யும் நாயகனே
நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே
-உம்மைப்


Eppoluthum Evvaelaiyum Chords for Keyboard, Guitar and Piano

Eppoluthum Evvaelaiyum Chords in E♭ Scale

தமிழ்