Vaarunga En Naesarae in G♭ Scale

G♭ = F♯

வாருங்க என் நேசரே
வயல்வெளிக்குப் போவோம் – அங்கே
என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்குக் கனியாய் கொடுப்பேன் – 2
– வாருங்க
ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் – 2
உம்மை துதித்து … துதித்து
தினம் பாடி … பாடி – தினம்
நடனமாடி மகிழ்வேன் – 2
– வாருங்க
நேசத்தால் சோகமானேன் உம்
பாசத்தால் நெகிழ்ந்த போனேன்
உம் அன்புக் கடலிலே
தினமும் மூழ்கியே
நீந்தி ….. நீந்தி … மகிழ்வேன் – 2
– வாருங்க
நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா
உம்மை தொழுவேன் – 2
– வாருங்க


Vaarunga En Naesarae Chords for Keyboard, Guitar and Piano

Vaarunga En Naesarae Chords in G♭ Scale

தமிழ்