Malaimael Aeri in A Scale

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்
காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே


Malaimael Aeri Chords for Keyboard, Guitar and Piano

Malaimael Aeri Chords in A Scale

தமிழ்