Oru Murai Orae Murai Chords

ஒரு முறை ஒரே முறை
உங்களைப் பார்க்கணும் இயேசுவே
ஒரு முறை ஒரே முறை
நீங்க பேசணும் இயேசுவே
நான் பாக்கணும் நீங்க பேசணும்
அதைக் கேட்கணும் என்னை மறக்கணும்
அது போதும் என் இயேசுவே(2)
—ஒரு முறை
அதிகாலமே உம்மை தேடுறேன்
பகலிலும் உம்மை தேடுறேன்
மாலையில் உம்மை தேடுறேன்
நல் இரவிலும் உம்மை தேடுறேன்
அதிகாலமே உம்மை தேடுறேன்
—ஒரு முறை
என் பாவத்தை விடுகிறேன்
என் இதயத்தை சுத்தம் செய்கிறேன்
உம்மை தரிசிக்கும் பாக்கியம் வேணுமே
இப்பவே அதை தாருமே
என் பாவத்தை விட்டு விடுகிறேன்
—ஒரு முறை
என் நினைவெல்லாம் இயேசு நீங்க தான்
வேறு ஒண்ணுமே எனக்கு தோணல
என் விருப்பமே என் பிரியமே
என் கூடவே நீங்க இருக்கணும்
என் நினைவெல்லாம் இயேசு நீங்க தான்
—ஒரு முறை


Oru Murai Orae Murai Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்