மறவார் இயேசு மறவார் உன்னை
ஒரு இமைப் பொழுதிலும் மறவார்
மறவார் இயேசு மறவார் உன்னை
உருவாக்கிய இயேசு மறவார்
அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலை மாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்
மகிமையின் தேவன் உன்னை மறவார்
– மறவார்
தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கிய நடத்திட மறவார்
எப்பக்க நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்
எலியாவின் தேவன் உன்னை மறவார்
– மறவார்
வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
வழிக்காட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார் தம்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்
– மறவார்
Maravaar Yesu Maravaar Chords for Keyboard, Guitar and Piano