கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
எப்போது என் இயேசு வருவார் என்று
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
எப்போது தரிசனம் தருவார் என்று
எப்போது தரிசனம் தருவார் என்று
வானத்தைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வாடியே போனது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெந்து அழிந்து போவோம் என்று
….கேட்டேன்
கடலினை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது கதறியே அழுதது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வெட்டாந்தரையாய் போவோம் என்று
….கேட்டேன்
மலைகளை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று
….கேட்டேன்
மேகத்தை கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
வாகனமாக வருவோம் என்று
….கேட்டேன்
Gmதூதரைக் கேட்டேன்
எப்போது என் இயேசு வருவார் என்று
அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
காரணம் அவர் வருகையில்
தாங்களும் கூட வருவோம் என்று
….கேட்டேன்
இயேசுவைக் கேட்டேன்
எப்போது தேவா உம் வருகை என்று
அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்
….கேட்டேன்
Kaettaen Kaettaen Kaettaen Intu Eppothu En Yesu Varuvaar Entu Chords for Keyboard, Guitar and Piano