உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல வேறு தேவன் இல்லை அல்லேலூயா அல்லேலூயா – 4 பாவியான என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்
—அல்லேலூயா என்னை அழைத்தவரே நீர் உண்மையுள்ளவரே
–அல்லேலூயா உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே
–அல்லேலூயா என்னை முன் குறித்தீரே நீர் கைவிடவே மாட்டீர்
–அல்லேலூயா என்னை மறுரூபமாக்கிடும் உந்தன் மகிமையில் சேர்த்திடும்
–அல்லேலூயா