Thoopam Pol En Jepangal in F Scale

தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்
…தூபம்
விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா
…தூபம்
என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே (நான்)
நாட விடாதேயும்
…தூபம்
என் கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் நான்
அழிய விடாதேயும்
…தூபம்
என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்து வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும்
அறிந்து இருக்கிறீர்
…தூபம்
இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே
…தூபம்


Thoopam Pol En Jepangal Chords for Keyboard, Guitar and Piano

Thoopam Pol En Jepangal Chords in F Scale

தமிழ்