Sinnanjitru Thottil in G♯ Scale

சின்னஞ்சிறு தொட்டில்
சின்ன மாட்டுக் கொட்டில்
சின்ன பாலன் இயேசு ராஜன்
செல்லமாக தூங்க
தூங்கு தூங்கு தேவ பாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வ வல்லவா
சர்வ லோகம் வாழ்த்திப் போற்றிட
மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
இயேசு பாலன் பிறந்த செய்தி கூறினார்
மண்ணுலகின் மன்னவரே மானிடரை
மீட்டிடவே மாந்தர் ஆனீரோ
–சின்னஞ்சிறு
என்னை மீட்ட மன்னனுக்கு புல்லணை தானோ
பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ
பொன்னுலகின் இரட்சகனே பாவிகளை
காணிக்கையை ஏற்றுக் கொள்ளுமே
—சின்னஞ்சிறு


Sinnanjitru Thottil Chords for Keyboard, Guitar and Piano

Sinnanjitru Thottil Chords in G♯ Scale

தமிழ்